BBQ சிக்கன்



என்னென்ன தேவை?

மேரினேட் செய்ய...

சிக்கன் - 400 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு - தலா 1/2 டீஸ்பூன்,
BBQ ஒரிஜினல் சாஸ் - 2 டீஸ்பூன்,
BBQ ஸ்மோக்கி ஃபிளேவர் சாஸ் - 1 டீஸ்பூன்,
கெட்டித்தயிர் - 3 டீஸ்பூன்,
லெமன் ஜூஸ், எண்ணெய் - தலா 1/2 டீஸ்பூன்.

டிக்கா செய்ய...

கரித்துண்டு - 1,
நெய் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 5 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சிக்கனை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கீறி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் மேரினேட் செய்ய கொடுத்த அனைத்து  பொருட்களை சேர்த்து 5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சிக்கனை வைத்து, நடுவில் ஒரு  கிண்ணத்தில் சூடான கரித்துண்டில் நெய் விட்டு வைத்து மூடி போட்டு சிக்கனை வேக வைக்கவும். இடை இடையே சிக்கனை திருப்பி விட்டு எடுத்து  சூடாக பரிமாறவும்.