சில்லி பனீர்



என்னென்ன தேவை?

பொரிக்க...

பனீர் - 250 கிராம்,
கார்ன்ஃப்ளார் - 2½ டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மைதா - 2½ டேபிள்ஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

சில்லி பனீர் செய்ய...

பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் - 1,
குடைமிளகாய் - 2,
பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - 1/4 கப்,
பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
கீறிய பச்சைமிளகாய் - 2,
காஷ்மீரி சிகப்பு மிளகாய் - 4,
இஞ்சி - சிறு துண்டு, டொமேட்டோ கெட்சப், சோயா சாஸ் - தலா 3 டேபிள்ஸ்பூன்,
தேன் - 2 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன் + தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எலுமிச்சைப்பழம் - பாதி பழம்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து பனீர் துண்டுகளை போட்டு  சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து கொள்ளவும். காஷ்மீரி மிளகாயை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும்.  கார்ன்ஃப்ளாரை 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் கரைத்து கொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி,  அரைத்த காஷ்மீரி மிளகாய் விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்ததும் கலவையை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு,

அதே கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து பாதி வதங்கியதும் காஷ்மீரி விழுது, தேன், மிளகுத்தூள்,  எலுமிச்சைச்சாறு, சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, கரைத்த கார்ன்ஃப்ளார் கலவையை ஊற்றி கிரேவி சிறிது  கெட்டியானதும் ஸ்பிரிங் ஆனியன், பொரித்த பனீர் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.