மட்டன் சீக் கபாப்



என்னென்ன தேவை?

மட்டன் பீஸ் - 250 கிராம்,
மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு - தலா 3/4 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது, பப்பாளிக்காய் விழுது - தலா 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிது,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 துண்டு,
வெண்ணெய் - தேவைக்கு,
வுட்டன் ஸ்க்யூவர் - 4.

எப்படிச் செய்வது?

வுட்டன் ஸ்க்யூவரை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லியை தண்ணீர் இல்லாமல் ஒன்றிரண்டாக  அரைத்துக் கொள்ளவும். பிறகு கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு பெரிய  பெரிய உருண்டைகளாக எடுத்து நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்.

வுட்டன் ஸ்க்யூவரில் சொருகி கபாப்களை ரெடி செய்யவும். தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து கபாப்களை வேகவைத்து எடுக்கவும்.  தேவைப்பட்டால் ஒரு கிண்ணத்தில் சூடான கரித்துண்டில் நெய் விட்டு கபாப்களின் நடுவில் வைத்து மூடி போட்டு வேகவைத்து எடுத்து பரிமாறவும்.