ஹாட் அண்ட் சோர் வெஜ் சூப்



என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1½ டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 1,
குடைமிளகாய் - 1/2 துண்டு,
வெஜிடபிள் ஸ்டாக் - 4 கப்,
மஷ்ரூம் - 2,
முளைக்கட்டிய பயறு - 1/4 கப்,
கோஸ் - 1/4 கப்,
கேரட் - 1,
சோயா சாஸ், வினிகர் - தலா 1½ டேபிள்ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார், ரெட் சில்லி சாஸ்,
எண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு,
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.

எப்படிச் செய்வது?

காய்கறிகளை நீளநீளமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து  வதக்கி, காய்கறிகள் மற்றும் முளைக்கட்டிய பயறு சேர்த்து வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ்,  வினிகர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கரைத்த கார்ன்ஃப்ளார் கலவையை ஊற்றி சூப் சிறிது கெட்டியானதும் ஸ்பிரிங் ஆனியன்  சேர்த்து இறக்கவும்.