சில்லி பிரான்



என்னென்ன தேவை?

பொரிக்க...

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன்,
மீடியம் சைஸ் இறால் - 12,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

சாஸ் செய்ய...

ஸ்பிரிங் ஆனியன் - 2,
குடைமிளகாய் - 1/2 துண்டு,
இஞ்சி - 1 சிறு துண்டு,
பூண்டு - 4 பல்,
பச்சைமிளகாய் - 1,
சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

இறாலுடன் உப்பு, சோயா சாஸ், கார்ன்ஃப்ளார் சேர்த்து கலந்து எண்ணெயில் பொரித்தெடுக் கவும். கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய  இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு  சோயா சாஸ், டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் பொரித்த இறாலை சேர்த்து கார்ன்ஃப்ளார் கலவையை  ஊற்றி அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கவும்.