மலாய் சிக்கன்



என்னென்ன தேவை?

மேரினேட் செய்ய...

எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்,
மலாய் - 2 டீஸ்பூன்,
கெட்டித்தயிர் - 2½ டீஸ்பூன்,
லெமன் ஜூஸ், இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலாத் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார், எண்ணெய் - தலா 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள், சோம்புத்தூள் - தலா 1/4 கப்.

டிக்கா செய்ய...

வுட்டன் ஸ்க்யூவர் - 3,
கரித்துண்டு - 1,
நெய் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 5 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சிக்கனை மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டி மேரினேட் செய்ய கொடுத்த பொருட் கள் அனைத்தையும் சிக்கனுடன் கலந்து 4-5 மணி நேரம்  ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். மரத்தினாலான ஸ்க்யூவரை தண்ணீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சிக்கனை எடுத்து  ஸ்க்யூவரில் சொருகி டிக்காவை ரெடி செய்து கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சிக்கனை வைத்து அனைத்து பக்கமும் வேகவைத்து  எடுக்கவும். ஒரு கிண்ணத்தில் சூடான கரித்துண்டை போட்டு அதில் நெய் விட்டு சிக்கனுக்கு நடுவில் வைத்து மூடி போட்டு வேகவைத்து எடுக்கவும்.  மையோனைஸுடன் சிக்கனை பரிமாறவும்.