ஸ்வீட்கார்ன் வெஜ் சூப்



என்னென்ன தேவை?

வெஜிடபிள் ஸ்டாக் செய்ய...

தண்ணீர் - 7 கப்,
குடைமிளகாய் - 1/2 துண்டு,
கேரட் - 1, பீன்ஸ், பட்டாணி, கோஸ், காலிஃப்ளவர் - தலா 100 கிராம்,
வெங்காயம் - 1,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 4 பல்,
பச்சைமிளகாய் - 1,
முழு மிளகு - 1/2 டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு ஏலக்காய் - சிறிது,
தனியா, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.

சூப் செய்ய...

நறுக்கிய பீன்ஸ், கேரட், ஸ்வீட்கார்ன் - 1/2 கப்,
வெஜிடபிள் ஸ்டாக் - 4 கப்,
ஸ்வீட்கார்ன் விழுது - 1/2 கப்,
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு,
கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெஜிடபிள் ஸ்டாக் செய்ய அனைத்து பொருட்களையும் பாத்திரத்தில் போட்டு 1 மணி நேரம் வேகவைத்து ஸ்டாக்கை வடித்து எடுத்துக் கொள்ளவும்.  இந்த ஸ்டாக்கை ஃப்ரீசரில் ஐஸ் ஊற்றி வைக்கும் ட்ரேயில் ஊற்றி ஐஸ் கட்டிகளாக்கி பாக்ஸிலோ அல்லது சிப்லாக் பேக்கிலோ போட்டு  தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். சூப் செய்ய காய்கறிகளை ஸ்டாக்கில் வேகவிட்டு உப்பு, மிளகுத்தூள், ஸ்வீட்கார்ன் விழுது சேர்த்து  கொதித்ததும், சூப்பை கெட்டியாக்க கார்ன்ஃப்ளார் கலவையை ஊற்றி திக் ஆனதும் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.