பொட்டேடோ ஸ்மைலிஎன்னென்ன தேவை?

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 கப்,
பிரெட் க்ரம்ஸ் - 3½ டீஸ்பூன்,   
கார்ன் ஃப்ளார் - 3 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு,
செடார் சீஸ் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

ஸ்மைலி செய்ய...

ஸ்பூன் - 1,
ஸ்ட்ரா - 1,
ரவுண்ட் கட்டர்- 1.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீஸ் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில்  வைத்து எடுக்கவும். பின்பு சப்பாத்திக்கல்லில் மாவை தேய்த்து வட்ட வடிவில் கட் செய்து ஸ்மைலிகளாக ரெடி செய்து கொள்ளவும். கடாயில்  எண்ணெயை ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து ஸ்மைலிகளை பொரித்தெடுத்து டொமேட்டோ கெட்சப் உடன் பரிமாறவும்.

குறிப்பு: ஸ்மைலிகளை சிப்லாக் பேக் அல்லது பாக்ஸில் போட்டு மூடி ஃப்ரீசரில் வைத்து தேவைப்படும் பொழுது எடுத்து அதிக சூடான எண்ணெயில்  பொரித்தெடுத்து கொள்ளலாம்.