லப்ஸிஎன்னென்ன தேவை?

உடைத்த சம்பா கோதுமை - 200 கிராம்,
பொடித்த பாதாம், பிஸ்தா - தலா 5,
பால் - 750 மி.லி.,
சர்க்கரை - 300 கிராம்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் தவாவில் நெய் சேர்த்து சுத்தம் செய்த உடைத்த சம்பா கோதுமையை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். அதில் தண்ணீர் சேர்க்காமல், பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வேக வைக்கவும். கலவையை அடிபிடிக்காமல் கிளறி சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பாதாம், பிஸ்தாவை சேர்த்து கிளறவும். தவாவில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி அலங்கரித்து பரிமாறவும்.