பாஸந்திஎன்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
ப்ளெயின் கோவா - 50 கிராம்,
முந்திரி, பாதாம் - தலா 5.

எப்படிச் செய்வது?

ஒரு அகலமான கடாயில் பாலைக் கொதிக்க விட்டு, 1 லிட்டர் பால் 1/2 லிட்டராக சுண்டும் வரை சிம்மில் வைத்து பாலைக் கொதிக்க விடவும். பால் சுண்டச் சுண்ட திரண்டு வரும் ஆடையை எடுத்து தனியே வைத்து கொண்டு, பாலில் சர்க்கரையைச் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். பாதி அளவிற்கு சுண்டியதும் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, கோவாவைச் சேர்த்து கிளறவும். இத்துடன் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரியைச் சேர்த்து கலந்து, தனியே எடுத்து வைத்த பால் ஆடையைச் சேர்த்து, ஆடை உடையாமல் கிளறி இறக்கவும். சூடு ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

குறிப்பு: கோவா கட்டியில்லாமல் கரைக்க, சிறிது பாலில் கோவாவை சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி சேர்க்கலாம். கோவாவை வீட்டிலேயே செய்ய 1 லிட்டர் எருமைப்பால் அல்லது பசும்பாலை நான்ஸ்டிக் பேனில் சேர்த்து, மிதமான சூட்டில் அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருந்தால், பால் நன்கு சுண்டி வரும் கட்டியே கோவாவாகும்.