ஒயிட் கேக் (சந்திர புளி)



என்னென்ன தேவை?

தேங்காய்த்துருவல் - 200 கிராம்,
சர்க்கரை - 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
கோவா - 500 கிராம்.

எப்படிச் செய்வது?

துருவிய தேங்காயை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காது அரைத்துக் கொள்ளவும். கோவாவையும் துருவிக் கொள்ளவும். நான்ஸ்டிக் பேனில் துருவிய கோவாவைச் சேர்த்து மிதமானச் சூட்டில் வதக்கவும். 3-4 நிமிடங்களில் கோவா முற்றிலும் உருகி விடும். அடிப்பிடிக்காமல் கிளறி, இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காயைச் சேர்த்து 5 நிமிடங்கள் தொடர்ந்து கிளறவும்.

கெட்டியாக திரண்டு வரும்போது அடுப்பை அணைத்து தட்டில் போடவும். சந்திரபுளிச் செய்யும் அச்சில் நெய்யை தடவி ஆறிய கலவையை (2 டேபிள்ஸ்பூன்) அதில் வைத்து விரல்களால் ஒரு அழுத்து அழுத்தி உடையாமல் அச்சிலிருந்து வெளியே எடுக்கவும். இதன் வடிவம் அரை நிலாவைப் போல் இருக்கும்.