மில்க் பேடாஎன்னென்ன தேவை?

கோவா - 2 கப்,
சர்க்கரை - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் - 50 கிராம்,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
முந்திரி, பாதாம் - தலா 5.

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் தவாவில் நெய்யை சேர்த்து, உருகியதும் கன்டென்ஸ்டு மில்க், சர்க்கரை, கோவாவை சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் கட்டியில்லாமல் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். நெய் தனியே பிரிந்து கலவை ஸ்மூத் பேஸ்ட்டாக திரண்டு வந்ததும் இறக்கி, பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து கலந்து, ஒரு அகலமான தட்டில் நெய் தடவி கலவையை கொட்டி சமமாக பரப்பி விடவும். ஆறியதும் விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.