சாஹி துக்ரா



என்னென்ன தேவை?

பிரெட் துண்டுகள் - 6,
சர்க்கரை - 100 கிராம்,
பால் - 100 மி.லி.,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
நெய் - 50 கிராம், முந்திரி, பாதாம் - தலா 12,
குங்குமப்பூ - 2 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

பிரெட்டின் ஓரங்களை நறுக்கி விட்டு முக்கோணம் அல்லது சதுர வடிவத்தில் வெட்டி கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் நெய்யை ஊற்றி சூடாக்கி பிரெட்டை பொரித்தெடுத்து தனியே வைத்து கொள்ளவும். கடாயில் பாலைச் சேர்த்து நன்கு காய்ச்சி, மிதமான தீயில் வைத்து பாதி அளவு சுண்டி வரும்வரை கைவிடாமல் கிளறி, ஓரங்களில் ஒட்டும் ஆடைகளை சேர்த்து கிளறவும். பின் ஏலக்காய்த்தூள், சர்க்கரை, குங்குமப்பூவை சேர்த்து கிளறவும். கிரீம் பதத்திற்கு வந்ததும் பொடித்த பாதாம், முந்திரியை கலந்து இறக்கவும். தட்டில் நெய்யில் பொரித்த பிரெட்டை அடுக்கி அதன் மீது பால் கலவையை ஊற்றி 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.

குறிப்பு: ப்ளெயின் கோவாவைச் சேர்த்தும் சாஹி துக்ரா செய்யலாம். கோவாவை சேர்க்கும் பொழுது பாலின் அளவை குறைத்துக் கொள்ளவும்.