ஆப்பிள் ஜீரா



என்னென்ன தேவை?

அரைத்து வைத்த ஆப்பிள் விழுது - 150 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
பால் - 400 மி.லி. + 50 மி.லி.,
பொடியாக நறுக்கிய பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்,
ரவை - 100 கிராம்,
பொடியாக சீவிய முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஆப்பிளின் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, 50 மி.லி. பாலைச் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் பேனில் நெய்யைச் சேர்த்து பாதாம், முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். மீதியுள்ள நெய்யில், மிதமானச் சூட்டில் ரவையைப் பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவைத்துக் கொள்ளவும்.

அதனுள் பாலைச் சேர்த்து மிதமானச் சூட்டில் ரவை கலவையை கிளறவும். இத்துடன் சர்க்கரையைச் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். பால், வேகவைத்த ரவையுடன் சேர்ந்து சுண்டியதும், ஆப்பிள் விழுதை சேர்த்து 5-10 நிமிடங்கள் கலவையைச் சூடு செய்து இறக்கவும். நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியை அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

குறிப்பு: பழுத்த மாம்பழம், சப்போட்டாவிலும் ஜீராவைச் செய்யலாம்.