ஃப்ரூட் மிக்ஸ் ரஃப்டி



என்னென்ன தேவை?

பால் - 1½ லிட்டர்,
சர்க்கரை - 150 கிராம்,
தோல் நீக்கி சீவிய பாதாம்,
பிஸ்தா - தலா 7,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய உலர்ந்த அத்திப்பழம் - 3,
தோல் சீவி பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 2 டேபிள்ஸ்பூன்,
டூட்டி ஃப்ரூட்டி - 1 டேபிள்ஸ்பூன்,
மாதுளை முத்துக்கள் - 2 டேபிள்ஸ்பூன்,
தோல் விதை நீக்கி நறுக்கிய ஆரஞ்சு சுளைகள் - 3.

எப்படிச் செய்வது?

ஒரு அகலமானப் பாத்திரத்தில் பாலைச் சேர்த்து காய்ச்சி 500 மி.லி. ஆகும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடாமல் சுண்ட காய்ச்சவும். ஓரத்தில் படியும் ஆடைகளை கரண்டியால் பாலில் கலந்து விடவும். பால் பாதி அளவு சுண்டியதும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பாதாம், பிஸ்தா கலந்து இறக்கவும். ரஃப்டி ரெடி. ஒரு கண்ணாடி பவுலில் ரஃப்டியை ஊற்றி அத்திப்பழம், டூட்டி ஃப்ரூட்டியை கலந்து வைக்கவும். சூடு ஆறியதும் ஆப்பிள், மாதுளை முத்துக்கள், ஆரஞ்சு சுளைகளை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

குறிப்பு : ரஃப்டியை பரிமாறும் முன்பு பழங்களை சேர்க்கவும். முன்னால் சேர்த்தால் தண்ணீர் விட்டு ரஃப்டியின் பதம் மாறி விடும்.