பெங்காலி லட்டுஎன்னென்ன தேவை?

கடலை மாவு - 200 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
எண்ணெய் - தேவைக்கு,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
பிஸ்தா - 3,
முந்திரி, பாதாம் - தலா 5,
குங்குமப்பூ - 2 சிட்டிகை,
துருவிய கோவா - 50 கிராம்.

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கம்பி பாகு பதத்திற்கு வந்ததும் ஏலக்காய்த்தூள் கலந்து இறக்கவும். கடலை மாவில் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் கரைத்து குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சிறிய ஓட்டையுள்ள அரிக்கரண்டியை வைத்து அதன் மீது கரைத்த மாவை தேய்க்கவும். எண்ணெயில் விழும் பூந்திகளை பொரித்தெடுத்து சர்க்கரைப்பாகில் போட்டு, துருவிய கோவா, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை ஒன்றாக கலந்து அழுத்தி பிசையாமல், சிறு சிறு உருண்டைகளாக லட்டு பிடித்து பரிமாறவும்.

குறிப்பு: அரிக்கரண்டியைக் கடாயின் அருகே வைத்து மாவைத் தேய்த்தால், பூந்தி உருண்டையாக விழும். மேலே தூக்கி வைத்து தேய்த்தால் நீளமாக விழும்.