மிஸ்தி தஹி



என்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 200 கிராம்,
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பிஸ்தா - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அகலமான நான்ஸ்டிக் பேனில் பாலை மிதமானச் சூட்டில் பாதி அளவிற்கு வரும்வரை சுண்டக் காய்ச்சி இறக்கவும். ஆறியதும் பாலில், பாதி அளவு சர்க்கரையைச் சேர்த்து கரைக்கவும். நான்ஸ்டிக் பேனில் மீதமுள்ள 100 கிராம் சர்க்கரையை சேர்த்து மிதமான சூட்டில் கரைய விட்டு கேரமலைஸ் செய்யவும். இதை பாலில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பால் ஆறியதும் தயிரையும் சேர்த்து நன்கு கலந்து, ஓர் இரவு முழுவதும் மண்பானையில் பாலை ஊற்றி வைக்கவும். ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்தெடுத்து பிஸ்தாவால் அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால் ஃப்ரெஷ் கிரீமை சேர்த்து செய்யலாம்.