மாவா மோதகம்



என்னென்ன தேவை?

சர்க்கரை இல்லாத கோவா - 300 கிராம்,
பொடித்த சர்க்கரை - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

நான்ஸ்டிக் தவாவில் கோவா, சர்க்கரையை கலந்து குறைவானச் சூட்டில் 15 நிமிடங்கள் அடிப்பிடிக்காமல் கிளறவும். சர்க்கரை உருகியதும், கோவாவும் கரையும். கடாயில் ஒட்டாமல் கலவைக் கெட்டியாகத் திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூளை கலந்து அடுப்பை நிறுத்தவும். சூடு ஆறியதும் மோதகம் செய்யும் அச்சில் கலவையைச் சேர்த்து அழுத்தி எடுக்கவும். அச்சு இல்லையெனில் கையினால் மோதக வடிவத்தில் மாவா மோதகத்தைச் செய்து பரிமாறவும்.