எளிய முறையில் விதவிதமான ஸ்வீட்ஸ்…



பெங்காலி ஸ்வீட்ஸ் என்றாலே வயது வித்தியாசமின்றி நம் வாயில் எச்சில்  ஊறும். வங்காள தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெங்காலி ஸ்வீட்ஸ், மீதமாகி திரிந்த பாலில் இருந்து பால் வியாபாரியால் இனிப்பு சேர்த்து சன்தேஷ் செய்யப்பட்டது.

சர்க்கரையையும் பாலையும் முக்கிய பொருட்களாகக் கொண்டு பெங்காலி ஸ்வீட்ஸ் தயாராகிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப வெவ்வேறு விதங்களில் பெங்காலி ஸ்வீட்ஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. நம் தமிழர்களும் பெங்காலி ஸ்வீட்ஸை விரும்பி சாப்பிடுகிறார்கள். குழந்தைகளை கொள்ளை கொள்ளும் வண்ணங்களில், அழகிய வேலைப்பாடுகளுடன் பெங்காலி ஸ்வீட்ஸ் தற்போது தயாராகத் துவங்கியுள்ளன. மிக எளிய முறையில் 30 பெங்காலி ஸ்வீட்ஸை எப்படி செய்யலாம் என்பதை தோழி வாசகர்களுக்காக செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் பிரியா பாஸ்கர்.

தொகுப்பு: ருக்மணிதேவி நாகராஜன்
எழுத்து வடிவம்: கே.கலையரசி