மூவர்ணப் பொரியல்என்னென்ன தேவை?

தேங்காய்த்துருவல் - 1 கப்,
நறுக்கிய அவரைக்காய்,
கேரட் - தலா 1/4 கப்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய் தாளித்து, அவரைக்காய், கேரட் இரண்டையும் வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். காய்கள் வெந்ததும் தேங்காய்த்துருவல் தூவி, மேலும் ஒருமுறை புரட்டி இறக்கவும். கலர்ஃபுல் பொரியலை சாம்பார், ரசம் சாதத்துடன் பரிமாறவும்.