தேங்காய் திரட்டுப்பால்என்னென்ன தேவை?

முற்றிய முழு தேங்காய் - 2,
வெல்லம் - 1/2 கிலோ,
பால் - 400 மி.லி.,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
உடைத்த முந்திரி - 5 டீஸ்பூன்,
நெய் - 5 டேபிள்ஸ்பூன்,
வறுத்த பாசிப் பருப்பு - 6 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தேங்காயை துருவி, வறுத்த பாசிப்பருப்பையும் சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து வேக விடவும். இப்பொழுது வெந்து தேங்காய் நிறம் மாறி வரும் பொழுது, வெல்லத்தைப் பொடியாக சீவிச் சேர்த்து, இடையிடையே நெய் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து கைகளால் உருட்டும் பதம் வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும். துண்டுகள் போட்டு பரிமாறவும். ஒரு வாரம் வரை கெடாது.