சொதிஎன்னென்ன தேவை?

முழு தேங்காய் - 1,
பாசிப்பருப்பு - 100 கிராம்,
பூண்டு - 6 பல்,
சாம்பார் வெங்காயம் - 10,
எலுமிச்சம் பழம் - 1,
பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறு துண்டு,
கீறிய பச்சைமிளகாய் - 4,
முருங்கைக்காய்,
உருளைக்கிழங்கு,
கேரட் - தலா 1,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

குக்கரில்  பாசிப்பருப்பை குழைய வேகவைக்கவும். தேங்காயைத் துருவி திக்கான முதல் பால், இரண்டாம், மூன்றாம் பால் எடுத்து தனியே வைக்கவும். காய்கறிகளை எண்ணெயில் வதக்கி கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் மூன்றாம் தேங்காய்ப்பால், உப்பு, வதக்கிய காய்கறிகளை போட்டு வேக விடவும். இத்துடன் பச்சைமிளகாய், வெந்த பாசிப்பருப்பு, இஞ்சியைச் சேர்த்து இரண்டாம் பாலை ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் முதல் பாலை ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கி, எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.