மிக்ஸ்டு வெஜிடபிள் ஸ்டூ



என்னென்ன தேவை?

நறுக்கிய நூல்கோல், கேரட், குடைமிளகாய், உருளைக்கிழங்கு - தலா 1,
நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப்,
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2,
தக்காளி - 3,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
திக்கான தேங்காய்ப்பால் - 1/2 கப்.

அரைக்க...

தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன், பூண்டு - 6 பல், இஞ்சி - சிறு துண்டு, காய்ந்தமிளகாய் - 6, தனியா - 1 டேபிள்ஸ்பூன், சீரகம், மஞ்சள் தூள், கசகசா - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும். தக்காளியை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து தோலுரித்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், நூல்கோல், கேரட், குடைமிளகாயை வதக்கி, உப்பு, தக்காளி விழுது, 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி நுரை தட்டியதும் இறக்கவும். சப்பாத்தி, நாண், தோசையுடன் சூடாக பரிமாறவும்.