தேங்காய் தயிர் பச்சடிஎன்னென்ன தேவை?

கெட்டித் தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
கெட்டி அவல் - 4 டேபிள்ஸ்பூன்,
அலங்கரிக்க கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.

அரைக்க...

தேங்காய்த்துருவல் - 1/2 கப், பச்சைமிளகாய் - 2.

தாளிக்க...

கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அவலை சுத்தம் செய்து தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை கெட்டியாக அரைத்து கொள்ளவும். பாத்திரத்தில் தயிர், அவல், உப்பு, சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து, தாளிக்கக் கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி கொத்தமல்லித்தழையை தூவி வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.