பிரிஞ்சி சாதம்



என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்,
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,
தக்காளி - 3,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
பூண்டு - 10 பல்,
பச்சைமிளகாய் - 2,
பிரிஞ்சி இலைகள் - 3,
சோம்பு - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
திக்கான தேங்காய்ப்பால் - 1½ கப்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

குக்கரில் எண்ணெயை காயவைத்து பிரிஞ்சி இலைகள், சோம்பு தாளித்து, இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி வதக்கி மிளகாய்த்தூள், உப்பு, 1½ கப் தேங்காய்ப்பால், 1½ கப் தண்ணீர், அரிசியை சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும். சத்தம் அடங்கியதும் எடுத்து கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து, ஆனியன் ரய்த்தாவுடன் பரிமாறவும்.