தேங்காய் கோப்தா கறிஎன்னென்ன தேவை?

கோப்தாவிற்கு...

அரைத்த தேங்காய் விழுது - 1 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலா - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கடலைமாவு - 6 டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய்,
உப்பு - தேவைக்கு.

கிரேவிற்கு...

நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்,
தக்காளி - 1,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
(அலங்கரிக்க) நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கோப்தாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேங்காய்த் துருவலை அரைத்து கிரேவியில் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து கொதித்ததும் இறக்கி, பொரித்த கோப் தாக்களை போட்டு கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து சப்பாத்தி, நாண், தோசையுடன் பரிமாறவும்.