தேங்காய் வடைஎன்னென்ன தேவை?

தேங்காய்த்துருவல் - 1½ கப்,
கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன்,
பொரிக்க எண்ணெய்,
உப்பு - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலா, மஞ்சள் தூள் - தலா 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை - தலா 1/4 கப், சீரகம் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

தேங்காய்த் துருவலை விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிசைந்து வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து சட்னி, சாஸுடன் பரிமாறவும்.