தேங்காய் கேக்என்னென்ன தேவை?

துருவிய தேங்காய் - 1½ கப்,
கடலை மாவு - 1/4 கப்,
சர்க்கரை - 2 கப்,
பால் - 1 கப்,
நெய் - 1/2 கப்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் கடலை மாவினை வறுத்துத் தனியே வைக்கவும். அதே கடாயில் 1/4 கப் நெய் விட்டு தேங்காய்த்துருவலை வறுத்து, பால், கடலை மாவை சேர்த்து, கட்டியில்லாமல் கைவிடாமல் கிளறவும். இடை இடையே நெய் சேர்க்கவும். தேங்காய், மாவு இரண்டும் வெந்ததும் சர்க்கரை, ஏலப்பொடி, மொத்த ெநய்யையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கைகளில் ஒட்டாத பதம் வந்ததும், தட்டில் நெய்யை லேசாக தடவி கொட்டி, ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: தேங்காய் கேக்கை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து துண்டுகள் போட்டால் நன்றாக துண்டுகள் போட வரும்.