மணக்கும் தேங்காய் சமையல்...‘‘இளவயதில் இருந்தே புத்தகம் படிப்பதிலும், சமைப்பதிலும் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. படித்து முடித்து திருமணம் ஆனதும் நடுவில் சிறிது பிரேக். குடும்பப் பொறுப்புகள் ஓரளவு முடிந்ததும் முன்னணி மாத, வார இதழ்களுக்கு நிறைய சமையல் குறிப்புகள் எழுத ஆரம்பித்தேன். பல குக்கரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல முன்னணி சமையல் கலைஞர்களுடன் சேர்ந்து சமைத்து பரிசுகள் பெற்றுள்ளேன்’’ எனும் ராஜகுமாரி நமக்காக இங்கே 30 வகையான தேங்காய் சமையலை செய்து காட்டியுள்ளார். கேரள மக்களின் அழகிற்கும், முடி வளர்ச்சிக்கும் தேங்காயை அவர்கள் உணவில் அதிகம் சேர்ப்பதும் ஒரு காரணம். அதே சமயம் தேங்காய்  சமையலை அளவுடன் சாப்பிட வேண்டும் என்கிறார் சமையல் கலைஞர் ராஜகுமாரி.

தொகுப்பு : ஸ்ரீதேவி மோகன்
எழுத்து வடிவம் : கே.கலையரசி
படங்கள் : ஆர். கோபால்