ஓட்ஸ் வெஜ் ரொட்டி



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 250 கிராம்,
உப்பு - தேவைக்கு,
ஓட்ஸ் - 100 கிராம்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
துருவிய பீட்ரூட் - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2-3,
துருவிய புரக்கோலி - 50 கிராம்,
எண்ணெய் - 30 மி.லி.,
சீரகம் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஓட்ஸை மிக்சியில் பொடித்து கொள்ளவும். பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு போட்டு கலந்து, கேரட், பீட்ரூட், புரக்கோலி, தேவையான தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி வைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை சிறு உருண்டைகளாக பிடித்து லேசாகத் தேய்த்து கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்து மொறுமொறுவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.