அத்திப்பழ சாலட்



என்னென்ன தேவை?

உலர்ந்த அத்திப்பழம் - 100 கிராம்,
தேன் - 50 மி.லி.,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
கிராம்புத்தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

உலர்ந்த அத்திப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் தேன், மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூளைச் சேர்த்து கலந்து பரிமாறவும்.