ஃப்ரைடு புரக்கோலி



என்னென்ன தேவை?

நறுக்கிய புரக்கோலி - 200 கிராம்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சை குடைமிளகாய் - 1,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1½ டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பச்சைவாசனை போக வதக்கி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, ஸ்பிரிங் ஆனியன், குடைமிளகாய், புரக்கோலியை போட்டு நன்கு வதக்கவும். பின் உப்பு, 50 மி.லி. தண்ணீர் சேர்த்து வேகவிடவும். நன்கு வறுவலாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.