சுரைக்காய் ஸ்பைசி பச்சடி



என்னென்ன தேவை?

தோல் சீவி துருவிய சுரைக்காய் - 200 கிராம்,
உப்பு - தேவைக்கு,
பெரிய வெங்காயம் - 1,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை - சிறிது,
பச்சைமிளகாய் - 2,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கெட்டி தயிர் - 300 மி.லி.,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தயிரை நன்கு அடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து துருவிய சுரைக்காய், வெங்காயத்தை போட்டு வதக்கி மிளகுத்தூள், சீரகம், பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை, கறிேவப்பிலை, பச்சைமிளகாய் வதக்கி உப்பு கலந்து இறக்கவும். ஆறியதும் தயிருடன் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: புடலங்காய், வாழைத்தண்டு, நீர்ப்பூசணிக்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், சௌசௌ, வெள்ளரிக்காய், முள்ளங்கி, கேரட், பீட்ரூட்டிலும் பச்சடி செய்யலாம்.