தானிய மிக்ஸ் பணியாரம்



என்னென்ன தேவை?

சோளம் - 50 கிராம்,
ராகி - 50 கிராம்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
சாமை - 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
குதிரைவாலி - 100 கிராம்,
காய்ந்தமிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பச்சரிசி - 50 கிராம்.

எப்படிச் செய்வது?

சோளம், ராகி, சாமை, பச்சரிசி, குதிரைவாலி அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, காய்ந்தமிளகாய், உப்பு போட்டு கலந்து தேவையான  தண்ணீர் ஊற்றி மாவை நன்கு கரைத்துக் கொள்ளவும். பணியாரக் கல்லை சூடாக்கி, குழியில் சிறிது எண்ணெய் சேர்த்து மாவை ஊற்றவும். தேவையான எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.