வாழைப்பழ ஜூஸ்



என்னென்ன தேவை?

பழுத்த வாழைப்பழம் - 1 (பூவம் பழம்) காய்ச்சி ஆறிய பால் - 200 மி.லி.,
தேவையானால் நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்,
பேரீச்சம்பழம் - 3, ஐஸ் கட்டிகள் - 3-5.

எப்படிச் செய்வது?

மிக்சியில் நறுக்கிய வாழைப்பழம், பால் சேர்த்து நன்கு நுரைக்க அடித்து, ஐஸ் கட்டி, நாட்டுச்சர்க்கரை சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும். உயரமான கண்ணாடி டம்ளரில் ஜூஸை ஊற்றி பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழத்தை கலந்து ஜில்லென்று பரிமாறவும்.