நாட்டுக்காய்கறிகள் மிக்ஸ் கூட்டு



என்னென்ன தேவை?

புடலங்காய் - 100 கிராம்,
உப்பு - தேவைக்கு,
பீர்க்கங்காய் - 100 கிராம்,
பட்டை - சிறிது,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சுரைக்காய் - 50 கிராம்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
கடலைப்பருப்பு - 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிது,
பெங்களூர் தக்காளி - 1,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம்    - 1,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
கிராம்பு - 2.

எப்படிச் செய்வது?

புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை கழுவி குக்கரில் 3  விசில் வரும்வரை  வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, காய்ந்தமிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, தேங்காய்த்துருவல் அனைத்தையும் சேர்த்து மிக்சியில் நன்கு நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின் புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காயை போட்டு வதக்கி மஞ்சள் தூள், அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான தண்ணீர் விட்டு வேகவைக்கவும். காய்கறிகள் வெந்ததும், வேகவைத்த கடலைப்பருப்பை சேர்த்து 5-10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.