ராகி மிக்ஸ் முட்டைகோஸ் ரொட்டி



என்னென்ன தேவை?

ராகி மாவு - 200 கிராம், உப்பு,
எண்ணெய் - தேவைக்கு,
முட்டைகோஸ் - 100 கிராம்,
பச்சைமிளகாய் - 3-4,
இஞ்சிச்சாறு - 1/4 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 50 கிராம்.

எப்படிச் செய்வது?

மிக்சியில் நறுக்கிய முட்டைகோஸ், பச்சைமிளகாயை சேர்த்து ஒரு சுற்று சுற்றி உதிரியாக எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் ராகி மாவு, அரைத்த கலவை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சிச்சாறு, மல்லித்தழையை சேர்த்து கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, லேசாக தேய்த்து, சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.