ஸ்வீட் பெர்ரி மிக்ஸ் லஸ்ஸி



என்னென்ன தேவை?

பெரிய நெல்லிக்காய் - 3,
உப்பு - 1 சிட்டிகை,
ஸ்ட்ராபெர்ரி பழம் - 5,
தண்ணீர் - 100 மி.லி.,
ப்ளாக்பெர்ரி - 3,
தேன் - 2 டேபிள்ஸ்பூன்,
வறுத்து பொடித்த சீரகம் - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய புதினா - சிறிது,
புளிக்காத கெட்டி தயிர் - 200 மி.லி.

எப்படிச் செய்வது?

மிக்சி அல்லது ப்ளெண்டரில் துண்டுகளாக நறுக்கிய நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து, கெட்டி தயிர், தேன், உப்பு, தண்ணீர் சேர்த்து மீண்டும் நன்கு நுரைக்க அரைக்கவும். டம்ளரில் லஸ்ஸியை ஊற்றி சீரகத்தூள், புதினா போட்டு கலந்து பரிமாறவும்.