வாழைத்தண்டு பாசிப்பருப்பு மிக்ஸ் பொரியல்



என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப்,
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
பாசிப்பருப்பு - 1/2 கப்,
பூண்டு - 5 பல்,
பச்சைமிளகாய் - 2-3,
உப்பு - தேவைக்கு,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
மஞ்சள் தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சீரகம், நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கி, வாழைத்தண்டு, மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறவும். வடித்த பாசிப்பருப்பை கொட்டி நன்கு புரட்டி, 50 மி.லி. தண்ணீர் சேர்த்து வெந்ததும் இறக்கி கறிவேப்பிலையை தூவி பரிமாறவும்.