பசலைக்கீரை கடைசல்



என்னென்ன தேவை?

பசலைக்கீரை - 1 கட்டு,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய பச்சைமிளகாய் - 2-3,
பொடித்த தனியா - 1 டீஸ்பூன்,
நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம்,
பொடித்த சீரகம் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பசலைக்கீரையின் தண்டை நீக்கி, கீரையை மட்டும் எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, 250 மி.லி. தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தனியாத்தூள், சீரகத்தூள், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, வெந்த கீரையை நன்கு கலந்து ப்ளெண்டர் அல்லது மத்தால் கடைந்து, சூடாக சாதத்துடன் பரிமாறவும்.