கேரட் பால்



என்னென்ன தேவை?

துருவிய கேரட் - 1 கப்,
பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்,
இஞ்சிச்சாறு - 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - சிறிது,
பால் - 250 மி.லி.

எப்படிச் செய்வது?

மிக்சியில் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இத்துடன் வெல்லம், இஞ்சிச்சாறு, ஏலக்காய்த்தூள், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

குறிப்பு: பீட்ரூட்டிலும் செய்யலாம். தேன் பயன்படுத்தலாம். கூடுமானவரை அஸ்காவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.