ஸ்டிர் ஃப்ரை பரோட்டா பாக்கெட்ஸ்



என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு.

ஸ்டஃப்பிங்க்கு...

நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பச்சை, ஆரஞ்சு, சிவப்பு குடைமிளகாய் - தலா 1,
வெங்காயம் - 1,
துருவிய கேரட் - 1/2 கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, குடைமிளகாய், கேரட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறி நன்கு வதங்கியதும் இறக்கவும். மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, தனித்தனியாக 3 அங்குல அகலத்தில் சப்பாத்தியாக இட்டு, நடுவில் தேவையான அளவு காய்கறிகளை வைத்து, ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி கவர் மடிப்பது போல நான்கு பக்கமும் அழுத்தி மூடவும். சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.