மேத்தி லச்சா பரோட்டா



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்,
வெந்தயக்கீரை - 1/2 கட்டு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
ஓமம் - 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய (இஞ்சி, பூண்டு - தலா 1/2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெந்தயக்கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் கோதுமை மாவு, வெந்தயக்கீரை, ஓமம், இஞ்சி, பூண்டு, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி கொள்ளவும். இதில் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து 20 நிமிடம் ஊறவிடவும்.

மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாக ேதய்த்து அதன் மீது நெய் தடவி, சிறிது கோதுமை மாவைத் தூவி, இருபக்கமும் பிடித்து விசிறி போல மடித்துக் கொண்டு வட்டமாக சுருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டையை உள்ளங்கையில் வைத்து அழுத்தி சற்று கனமான பரோட்டாவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.