ஸ்ட்ராபெர்ரி சாக்லெட் பரோட்டா



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
ஸ்ட்ராபெர்ரி பழம் - 10,
ஐஸிங் சுகர் - 4 டேபிள்ஸ்பூன்,
ரெடிமேட் மில்க் சாக்லெட் பார் - 50 கிராம்.

எப்படிச் செய்வது?

சாக்லெட் பாரை துருவிக் கொள் ளவும். ஸ்ட்ராபெர்ரி பழங்களை மிக்சியில் போட்டு கூழ் போல் அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த விழுது, ஐஸிங் சுகர் சேர்த்து நன்கு பிசறி, சிறிது சிறிதாக தண்ணீரை சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 20 நிமிடம் ஊற விடவும்.

பிசைந்த மாவை சம அளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி, அதன் மீது துருவிய சாக்லெட்டை வைத்து நன்றாக மூடி, கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். குழந்தைகளுக்கு பிடித்த பரோட்டா.