ஆச்சாரி லச்சா பரோட்டா



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்,
ஊறுகாயில் இருக்கும் மசாலா - 1/4 கப்,
உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கோதுமை, உப்பு, நெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணி நேரம் வைத்து சம அளவு உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்து அதன் மீது ஊறுகாய் மசாலா, நெய்யை தடவி, சிறிது கோதுமை மாவைத் தூவவும். இருபக்கமும் பிடித்துக் கொண்டு விசிறி போல மடித்துக் கொண்டு வட்டமாக சுருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டையை உள்ளங்கையில் வைத்து அழுத்தி சற்று கனமான பரோட்டாவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.