ஆப்பிள் ஸ்டஃப்டு பரோட்டா



என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

கோதுமை மாவு - 1 கப்,
மைதா மாவு - 1/4 கப்,
மாவு பிசைய பால் - தேவையான அளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

ஸ்டஃப்பிங்க்கு...

ஆப்பிள் - 1,
இனிப்பில்லாத பால் கோவா - 1/4 கப்,
தேங்காய் - 1/4 கப்,
வெல்லம் - 1/8 கப்,
இலவங்கப்பட்டை தூள் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கோதுமை, மைதா மாவு, பால், உப்பு அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். பால் கோவா, தேங்காய், வெல்லம் அனைத்தையும் துருவிக் கொள்ளவும். ஆப்பிளை தோல் சீவி துருவி நன்கு பிழிந்துக் கொள்ளவும். பாத்திரத்தில் ஆப்பிள், பால் கோவா, தேங்காய், வெல்லம், இலவங்கப்பட்டை தூள் சேர்த்து கிளறவும்.

மாவை சம அளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி ஆப்பிள் கலவையை அதன் உள்ளே ஸ்டஃப்பிங் செய்து இழுத்து மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு நன்கு வெந்ததும், திருப்பிப் போட்டு, மறுபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்பு: இரண்டு சப்பாத்திகளின் நடுவில் கலவையை வைத்து ஓரங்களை மூடி திரட்டியும் பரோட்டா செய்யலாம்.