வெஜிடபிள் மஞ்சூரியன் பரோட்டா



என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
தக்காளி சாஸ் - 1/2 கப்.

ஸ்டஃப்பிங்க்கு...

துருவிய கேரட் - 1/2 கப்,
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப்,
வெங்காயம் - 1,
குடைமிளகாய் - 1,
உருளைக்கிழங்கு - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கட்டு,
காய்ந்தமிளகாய் - 2,
சோள மாவு - 3 டீஸ்பூன்,
மைதா மாவு - 1½ டீஸ்பூன்,
சோயா சாஸ் - 1½ டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். இத்துடன் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உப்பு, சோள மாவு, மைதா சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக பிடித்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீரில் சோள மாவைக் கரைத்து ஊற்றவும். பின்பு தக்காளி சாஸ், சோயா சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து பொரித்த உருண்டைகளை போட்டு கலந்து, கெட்டியானதும் வெங்காயத்தாளை தூவி இறக்கவும்.

மாவை சரிசம உருண்டைகளாக உருட்டி, 3 அங்குல அகலத்தில் சப்பாத்தியாக இட்டு, ஒரு பாதியில் தேவையான மஞ்சூரியனை வைத்து, ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி அழுத்தி மூடி, சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து பரிமாறவும்.