ராஜஸ்தானி கோபா பரோட்டா



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
ஓமம் - 1/2 டீஸ்பூன்,
நெய் - 1/2 கப் (1/4 + 1/4).

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, உப்பு, ஓமம், 1/4 கப் நெய் சேர்த்து தண்ணீர் தெளித்து மிகவும் கெட்டியான சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரமாவது மூடி வைத்து ஊற விடவும். பிசைந்த மாவை சப்பாத்தி அளவை விட சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி, 1/4 அங்குலம் கனமான சப்பாத்திகளாக இட்டு, அதன் மேல் நடுநடுவே விரல்களால் மாவைக் கிள்ளவும். சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு சிறிய தீயில் வேகவிட்டு, இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து, தாலுடன் சூடாக பரிமாறவும்.