சீஸ் கார்ன் ராப்ஸ் பரோட்டா



என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு...

கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவையான அளவு.

ஸ்டஃப்பிங்க்கு...

உதிர்த்த இனிப்பு சோளம் - 1/2 கப்,
துருவிய சீஸ் - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 2,
வெங்காயம் - 1,
பிரெட் தூள் - 1/2 கப்,
சோள மாவு - 3 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்,
சப்பாத்தி - தேவைக்கேற்ப,
மையோனைஸ் - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
துருவிய கேரட் - 1/2 கப்,
லெட்டியூஸ் - 6 இலைகள்,
தக்காளி சாஸ் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து உதிர்த்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தக்காளி சாஸ், மையோனைஸை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் 1/4 கப் சீஸ், சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம், பிரெட் தூள், சோள மாவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழையை சேர்த்து பிசைந்து, கபாப்களாக உருட்டி, பொன்னிறமாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சப்பாத்தி மாவை சம அளவு உருண்டைகளாக பிரித்து, 2 உருண்டைகளை எடுத்து தனித்தனியாக 3 அங்குல அகலத்தில் சப்பாத்தியாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போட்டு வெண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

பரிமாறும் முறை...
முதல் சப்பாத்தியில் மையோனைஸ், தக்காளி சாஸ் கலவையை தடவி அதன் மீது லெட்டியூஸ் இலை, கபாப் வைத்து, அதன் மீது வெங்காயம், தக்காளி, கேரட், சீஸ் துருவலை தூவி, அதன் மீது தக்காளி சாஸை சிறிது ஊற்றி, அதன் மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்து நன்கு இறுக்கமாக சுற்றி பரிமாறவும்.