ஆலு பர்கர்



என்னென்ன தேவை?
 
பர்கர் பன் - 2 அல்லது தேவைக்கு,
மையோனைஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
வட்டமாக நறுக்கிய வெங்காயம் - 8 ஸ்லைஸ்,
தக்காளி - 6 ஸ்லைஸ்,
வேகவைத்து உதிர்த்த இனிப்பு சோளமுத்துக்கள் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - சிறிது,

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்,
கிரீன் சில்லி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
பெரிய உருளைக்கிழங்கு - 2,
நறுக்கிய சீஸ் துண்டுகள் - சிறிது.

எப்படிச் செய்வது?
 
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சதுரமாக வெட்டவும் அல்லது துருவவும். பர்கர் பன்னை நடுவில் வெட்டி தவாவில் சிறிது நெய் விட்டு உள்பக்கம் ரோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கில், மிளகுத்தூள், கருப்பு உப்பு, உப்பு, சோளமுத்து, மையோனைஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து பர்கர் நடுவே வைக்கவும். அதன் மீது தக்காளியை அடுக்கவும். அதன் மீது சீஸ் துண்டுகளையும், வெங்காயத்தையும் அடுக்கி மீண்டும் உருளை மற்றும் மையோனைஸ் கலவையை போட்டு மற்றொரு பன்னால் மூடி பரிமாறவும்.
 
குறிப்பு : மையோனைஸ் ரெடிமேடாக கிடைக்கிறது அல்லது தயிர், புட் வினிகர் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்தால் மையோனைஸ் ரெடி.